அஜீத்தின் ஏகே62!! மனம் திறக்கிறார் விக்னேஷ் சிவன்!!

 
ஏகே62

தமிழ் திரையுலகில் ‘தல’ யாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவருடைய அடுத்த படமான துணிவு 2023 பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத்தின் அடுத்த படம் குறித்து  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு தற்போது ஏகே62 என பெயரிடப்பட்டுள்ளது.

ஏகே2

 தற்காலிகமாக ஏகே62 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படம்  லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. மிக விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே62 குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   எனது அடுத்த படமான ஏகே62 ல் தல அஜீத்தின் படம் தான். அஜீத்திற்காக கதையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது  இந்த படத்தை பொறுத்தவரை கதையில் எனக்கு முழுவதுமாக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏகே2

இது தான் எனக்கு அஜித் சார் முதலில் கொடுத்த அறிவுரை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது உங்கள் படம் நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் என்பது மட்டும் தான் எனக் கூறியுள்ளார். அஜித் படத்தை இயக்குவதால் எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. பிடித்ததை செய்வேன். என்னுடைய கதை 100% என்னுடைய ஸ்டைல் திரைப்படமாகவே இருக்கும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web