மதுபானப்பிரியர்களே உஷார்!! 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் 5,425 மதுபானக் கடைகள் மூலம் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்து வருகிறது. டாஸ்மாக்கின் தினசரி விற்பனை ரூ100கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண்டில்  திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உட்பட  8 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது

டாஸ்மாக் விடுமுறை

அதே சமயத்தில்  பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் ஜனவரி 26ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஜனவரி 16 திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 வியாழக்கிழமை குடியரசு தினம் காரணமாக மதுபானக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீர் டாஸ்மாக்

இந்த 2 நாட்களும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள்  மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் மேற்கூறிய தேதிகளில் டாஸ்மாக், மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web