அலர்ட்! நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை! மத்திய அரசு அறிவுறுத்தல்!

 
கொரோனா

அலர்ட்டாக இருங்க மக்களே... மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சின்ன அண்ணன் சீனாவும், பெரியண்ணா அமெரிக்காவும் இந்த முறை கொரோனா பரவல் குறித்து அதிகம் பயந்துள்ளன. அடுத்த 3 மாதங்களில் கொத்து கொத்தாக சுமார் 20 லட்சம் பேர் சீனாவில் மட்டுமே இதனால் உயிரிழப்பார்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க்  நாடுகளிலும் இந்த புதுவகையான வைரஸ் பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா

இந்நிலையில், புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாதவர்கள் அனைவரும் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக மூக்கு வழியாக செலுத்தும் நாசல் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை செலுத்திக் கொள்பவர்களுக்கு கொரோனா தாக்கும் அபாயம் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்துளனர்.

இந்நிலையில், நாளை டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு  மத்திய  சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த ஒத்திகையில்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தேவையான அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் கையிருப்பு இதனை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனா கொரோனா

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்  ஸ்டாலின்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வருடன்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும்  பயணிகள்  மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனை செய்யும் போது அறிகுறி இருப்பவர்கள்  தனிமைப்படுத்தப்பட வேண்டும்.  சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web