அலெர்ட்.. ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயம்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

 
விமான நிலையம்

வரும் ஜனவரி 1, 2023 புத்தாண்டு முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகள் அனைவரும், விமானத்தில் புறப்படுவதற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளைச் செய்வது கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

உலகம் முழுவதுமே கொரோனா தொற்று பரவல்  மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், விமானம் புறப்படுவதற்கு முன் கட்டாயமாக ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்து, ஜனவரி 1, 2023 முதல் ஏர் சுவிதா போர்ட்டலில் அவர்களின் பரிசோதனை அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விமான நிலையம்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும்,  பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 2 சதவீத சீரற்ற சோதனைகளுக்கு கூடுதலாக இந்தச் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் நிலவும் கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு  இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web