புத்தாண்டு கொண்டாட இதற்கெல்லாம் அனுமதி கிடையாது?!

 
BIG NEWS!! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!! கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

நாளையுடன் 2022ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டை பொறுத்தவரை அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் புத்தாண்டை கொண்டாட கட்டுப்பாடுகள் கிடையாது. அதே நேரம் பாதுகாப்புடன் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மத்திய , மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மக்களே குறிச்சிக்கோங்க!! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை !! முதல்வர் அதிரடி!!

தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த அச்சம் தேவையில்லை. ஆனால் சமூக இடைவெளி , முகக்கவசம் இவைகளை பொதுமக்கள் கூடும் இடங்களில் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட வேண்டும் என காவல்துறை  சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 டிசம்பர் 31ம் தேதி  இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் குடும்பத்துடன்  புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
டிசம்பர் 31 மாலை முதல்  தமிழகம் முழுவதும் 90,000 போலீசார்  மற்றும்  10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு மற்றும் வாகன பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
நள்ளிரவில் காரணமின்றி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
 கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. 
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள்  கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
அதே போல் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதிக்காக  இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதி. 
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புடன் திறக்க அனுமதி

புத்தாண்டு
வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். 
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.  
பைக் ரேஸ்  போன்ற  ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 
அவசர கால தொலைபேசி எண் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். அவசர ஆபத்து நேரங்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். 
'காவல் உதவி' செயலி மூலம் உதவி கோரலாம். 
 அசம்பாவிதம், விபத்துக்கள் இல்லாத பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித தடையும் கிடையாது  பொதுமக்கள்  தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web