அல்லு அர்ஜுன் மகள் பெரிய ராக்ஸ்டாராக போகிறாள்!! நடிகை சமந்தா நெகிழ்ச்சி!!

 
அல்லு அர்ஹா

நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு  ருத்ரமாதேவி இயக்குநர் குணசேகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் 6 வயது அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்படுகிறார்.

அல்லு அர்ஹா

சகுந்தலம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அல்லு அர்ஹா நடித்துள்ளார். இது குறித்து சமந்தா நெகிழ்ச்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா பின்னாளில் பெரிய ராக் ஸ்டாராக போகிறாள். படப்பிடிப்பு தளத்தில் 300க்கும் மேற்பட்ட அறியாதவர்கள் இருந்த போதிலும் ஒரு பதற்றமோ,பயமோ, தடுமாற்றமோ கிடையாது.மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடித்தாள்.

அல்லு அர்ஹா

தெலுங்கிலேயே அனைவரின் கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறாள். அவள் என்னுடைய படத்தில் என்னுடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் சில வருடங்களில் சினிமா உலகை ஆளப் போகிறாள். படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் இதை உணர்வீர்கள் என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web