அசத்தல்.. ஜூன் மாதம் திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல்!

 
திருச்சி விமான நிலையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் விமான நிலைய பழைய டெர்மினல் வளாகத்தில் நேற்று நடந்தது.  ஆலோசனை குழுத் தலைவர் வரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.  கூட்டத்தில், விமான நிலைய மேம்பாடு, புதிய டெர்மினல் கட்டும் பணியின் முன்னேற்றம், விமானநிலைய ஓடுதளம் நில ஆர்ஜிதத்தில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

இதில், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், விமானநிலைய இயக்குனர் சுப்ரமணி, மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, ஆர்.டி.ஓ. தவச்செல்வம், குழு உறுப்பினர்கள் சேக ரன், முகமது அபுபக்கர், சிவாஜி சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கூட்டத்துக்குப்பின் எம்பி திருநாவுக்கரசர் கூறியது... திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய டெர்மினல் கட்டும் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் முழுவதும் அடுத்த மாதம் முழுமை பெற்று ஜூன் மாதம் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படும்.  ’ஏர் இந்தியா விமான நிலையம் திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் நீதி மன்றத்தில் வழக்குகளால் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.  இது வரை 40 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, பத்திரப்பதிவுக்கான பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.

ஸ்ரீலங்கா விமான நிலையம் திருச்சி

திருச்சியில் இருந்து மும்பை, கொச்சி உள் ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கடந்தாண்டி பயணிகள் வருகை அதிகரிப்பு மற்றும் சரக்குகள் கையாண்டதில் ரூபாய் 50 கோடி நிகரலாபத்தை ஈட்டியுள்ளது.  சரக்கு ஏற்றுமதியாளர்களுக்கு பிரச்னையாக உள்ள ஜிஎஸ்டி தொகை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து மத்திய அரசிடம் பேசி முடிவெடுக்கப்பட்டது, இவ்வாறு கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web