அசத்தல்.. தபால் துறையும், ரயில்வேயும் இணைந்து சேவை.. இனி பார்சல் அனுப்புறது ரொம்ப ஈஸி! முழு விபரம்?

 
ரயில் தபால் பார்சல்

சமீபத்தில் தனியார் கூரியர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட நாட்களாக பொது மக்கள் மத்தியில் நிலவிய குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஆம் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் ஏன் நஷ்டத்தை சந்திக்கின்றன் என்பது தான். அதற்கான விடையாக இந்த முயற்சி இப்போது நடந்திருக்கிறது.

ஒரு கையை தட்டினால் ஓசை எழாது. இரண்டு கைகளை தட்டினால் ஒலி எழும். அதற்கு ஓர் உதாரணம் தான் இந்த இணைப்பு பாலம். இந்திய தபால்துறை மற்றும் ரயில்வே துறை ஆகியவை இணைந்து, கூட்டு பார்சல் வினியோக முறையைத் தொடங்கியுள்ளது.  இதன் படி, 35 கிலோ எடைக்கும் அதிகமான பார்சல்களை வாடிக்கையாளர் இருப்பிடத்திலிருந்து பெற்று, ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.  அங்கிருந்து குறிப்பிட்ட நிலையம் செல்லும் பார்சலை பெறும் தபால்துறை, அதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பிடத்தில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டு பார்சல் வினியோக சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் 3ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ரயில் தபால் பார்சல்

பார்சலைப் பெற்றுக் கொண்டது முதல், அதை வினியோகம் செய்யும் வரை வாடிக்கையாளருக்கான தொடர்பு அலுவலகமாக, தபால் துறை செயல்படும். முன்னதாக, சென்னை மண்டலத்தில் ராணிப்பேட்டையில் இருந்து திருச்சி மாவட்டம் திருமானுாருக்கு கடந்த டிசம்பர் 7ம் தேதி பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த  பார்சல் திருச்சி ரயில் நிலையத்தில் பெறப்பட்டு, டிசம்பர் 8ம் தேதி வாடிக்கையாளர் முகவரியில் ஒப்படைக்கப்பட்டது.

ரயில் தபால் பார்சல்

ரயில்வே மற்றும் தபால்துறையின் இந்த கூட்டு பார்சல் சேவையை பெற விரும்புவோர் உதவி இயக்குனர், (வர்த்தக மேம்பாடு) சென்னை பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது 044 2859 4761 /044 28594762 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் அதிக விபரங்கள் மற்று விளக்கங்களைப் பெற bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web