அசத்தல்.. ஸ்மால் கேப் ஷேர்: ஒரு பங்கிற்கு 30 ரூபாய் டிவிடெண்ட்!

 
வெண்ட்

வென்ட் (இந்தியா) லிமிடெட்  நிறுவனம் தொழில்துறையில் செயல்படுகிறது. அதே சமயம் ரூபாய் 1,669.75 கோடி சந்தை மதிப்பீட்டில் உள்ள ஒரு சிறிய நிறுவனமாகும். இந்நிறுவனம் அதன் Q3FY23 வருவாயை வெளியிட்டது. இதில் அசத்தலாக ஒரு பெரிய அளவாக 300 சதவிகிதம் ஈவுத்தொகையை தனது ஷேர் ஓல்டர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிவிப்பில், “நல்ல செயல்பாட்டிற்கு ஏற்ப, இயக்குநர்கள் குழு இடைக்கால ஈவுத்தொகையாக ரூபாய் ஒரு பங்கிற்கு 30/- வழங்குவதாக அறிவித்துள்ளது. ( தலா ரூபாய் 10/- என்ற ஈக்விட்டி பங்குகளின் முக மதிப்பில் 300 %.).

மோட்டார் உதிரி பாகங்கள்

"இடைக்கால ஈவுத்தொகையைப் பெறத் தகுதியான உறுப்பினர்களைத் தீர்மானிப்பதற்கான பதிவு தேதி செவ்வாய், 31 ஜனவரி 2023 ஆகும். பங்குதாரர்கள் NECS/ECSஐத் தேர்வுசெய்தால், டிவிடெண்ட் அவர்களின் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை, 14 பிப்ரவரி 2023க்குள் வரவு வைக்கப்படும். பங்குதாரர்கள் பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்தால், அது 14 பிப்ரவரி 2023 செவ்வாய்க்கிழமைக்குள் அனுப்பப்படும்" என்று Wendt பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தனி விற்பனை ரூபாய் டிசம்பர் 2022ல் முடிவடைந்த காலாண்டில் 4, 691 லட்சங்கள், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 30 சதவிகித வளர்ச்சியாகும். Q3FY23ல், உள்நாட்டு விற்பனை மொத்தம் ரூபாய் 3,470 லட்சங்கள், Q3FY22ஐ விட 24 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது டிசம்பர் 31, 2022 அன்று முடிவடைந்த ஒன்பது மாதங்களில், நிறுவனம் மொத்த விற்பனை ரூபாய் 13, 710 லட்சங்கள், முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 20 சதவிகித வளர்ச்சி மற்றும் PAT ரூபாய் 2767 லட்சங்கள், அதே காலகட்டத்தில் 45 சதவிகித உயர்வு கண்டுள்ளது.

வெண்ட்

கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, ​​நடப்பு காலாண்டின் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ரூபாய் 1,145 லட்சங்கள் தனித்தனி அடிப்படையில், 69 சதவிகித வளர்ச்சி. (YoY). அதிக விற்பனை மற்றும் செயல்பாட்டுத் திறன் நடவடிக்கைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவதே லாபத்தின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

டிசம்பர் 2022ல் முடிவடைந்த காலாண்டில் ஏற்றுமதி ரூபாய் 1,221 லட்சங்கள், முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 47 சதவிகித வளர்ச்சி. அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேஷியா, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து அதிக லாபம் ஈட்டப்பட்டதே இதற்குக் காரணம் என்று வென்ட் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web