அசத்தல்.. 173 வகையான உணவுகளை மருமகனுக்கு பரிமாறி திக்குமுக்காட செய்த மாமியார்!

 
173

மாமியாருக்கும், மருமகளுக்கும் தான் பெரும்பாலான இடங்களில் கெமிஸ்ட்ரி வொர்க் - அவுட் ஆவதில்லை. இப்போதெல்லாம் காலம் மாறி போச்சு. நிறைய இடங்களில், மாமியார்கள் தங்களது மருமகன்களைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ‘என் பொண்ணையே வெச்சு சமாளிக்கிறீயே? என்கிற பரிதாபமாகவோ.. என் பொண்ணை நல்லா பார்த்துக்கப்பா? என்கிற எதிர்பார்ப்பா? என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், தங்களது மகளின் கண்களில் ஆனந்தத்தைப் பார்க்க விரும்பும் அம்மாக்கள், தங்களது மருமகனுக்கு விதவிதமாக சமைத்து, அதிக எண்ணிக்கையில் வெரைட்டியான உணவுகளைச் செய்து சாப்பிட சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த எண்ணிக்கை, 30, 40 என்று துவங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் 60,80 என அதிகரித்து 150 வரை சென்றது. தற்போது, ஆந்திர  மாநிலத்தில், சங்கராந்தி விழாவை முன்னிட்டு, புது மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்து, பஜ்ஜியில் துவங்கி சுட சுட பிரியாணி வரையில் 173 வகையான உணவுகளைத் தயார் செய்து சாப்பிடச் சொல்லி பரிமாறி அழகு பார்த்திருக்கிறார் மாமியார் சந்தியா. 


பொதுவாகவே தமிழர்களைப் போலவே விருந்தோம்பலுக்கு ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெயர் போனவர்கள். விருந்தினர்களை அவர்கள் உபசரிக்கிற பாங்கே அலாதியானது. மனதில் வஞ்சம் இல்லாமல் நெஞ்சமெல்லாம் ஆரத்தழுவி முழு அன்போடு உபசரிப்பார்கள். இதெல்லாம் இந்த தலைமுறையினர் மறந்து போன விஷயங்களில் ஒன்றான இந்த காலத்தில், இந்த உபசரிப்பை  மொத்த ஆந்திர மக்களும் கொண்டாடுகிறார்கள்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ப்ரித்வி குப்தா. இவருக்கு கோதாவரியைச் சேர்ந்த ஹாரிகா என்கிற  பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், சங்கராந்தியை முன்னிட்டு மனைவி ஹாரிகாவை அழைத்துக் கொண்டு கிழக்கு கோதாவரியில் உள்ள பீமவரத்தில் தனது மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக சென்றுள்ளார். வீட்டின் வாசலில் நின்று மகளையும், மருமகனையும் ஹாரிகாவின் தந்தை நாக பத்ரிலட்சுமி நாராயணாவும், தாய் சந்தியாவை அன்புடன் வரவேற்றனர்.

Andhra

திருமணம் ஆனபின் சங்கராந்தியை முன்னிட்டு முதல்முறையாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகனை அசத்த முடிவு செய்த சந்தியா, உறவினர்கள் உதவியுடன் 173 வகையான உணவுகளை தயார் செய்தார்.

சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல், அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, பூந்தி, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று அந்த பட்டியல் நீண்டது. உணவுகளை தயார் செய்த மாமியார் சந்தியா அவற்றை மருமகனுக்கு மகளுக்கும் பரிமாறினார்.

இத்தனை உணவுகளையும் சாப்பிட வேண்டுமா என்று மனைவி ஹாரிகாவிடம் ப்ரித்வி கேட்டார். கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனைவி கூற மாமியார், மாமனார் பார்த்து கொண்டிருக்க புது மாப்பிள்ளை 173 வகை உணவுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ருசி பார்த்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web