அசத்தல் சாதனை!! காமன்வெல்த் போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் !!

 
தினேஷ்

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார். இவர் டெட் லிஃப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனை முறியடித்து காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தினேஷ்

மேலும், ஸ்குவாட்டில் 200 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ  எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2" என்ற விருது வழங்கப்பட்டது.

காமன்வெல்த்

மேலும், ஏர்போர்ட், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ்.. ஷேக் அப்துல்லா என்பவர் 59 கிலோ எடைப் பிரிவில் டெட் லிஃப்ட் 170 கிலோ எடை தூக்கி தங்க பதக்கமும், ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 500 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web