இறந்தும் 2 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த18 மாத குழந்தை! குறைந்த வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததாக பதிவு!

 
மருத்துவமனை குழந்தை

தங்களது செல்லக் குழந்தை மரணமடைந்த சோகத்திலும், அடுத்தவருடைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்து உதவி செய்வதற்கு எல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும். அப்படியானதொரு முடிவை எடுத்திருக்கிறார்கள் ஆந்திர மாநில தம்பதியர்.

ஆந்திர மாநிலம் செல்லூரைச் சேர்ந்த இந்த தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு  முன்னர், வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது, டி.வி.பெட்டியை வைத்திருந்த டேபிள் மீது ஏற முயற்சித்து விளையாடியுள்ளது. அப்போது எதிர்பாராமல் டேபிள் திடீரென தவறி குழந்தை குப்புற கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை சேர்த்துள்ளனர்.

baby

உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 2ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கைவிரித்தனர்.

இந்நிலையில், அந்த குழந்தை உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தனர்.

Organ

இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது. குறிப்பாக கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன. இந்த குழந்தை தான் இதுவரை மாநிலத்திலேயே உடல் உறுப்பு தானம் செய்த மிக குறைந்த வயதிலான குழந்தை ஆகும்.

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 52 குழந்தைகள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். தற்போது 103 குழந்தைகள் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என பல்வேறு உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web