திருச்சியில் பழையப் பொருட்கள் சேகரிப்பு! புகையில்லா போகி கொண்டாட மாநகராட்சி ஆணையர் அழைப்பு!

 
திருச்சி புகையில்லா போகி

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து தீயிட்டு கொளுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால் காற்று மாசுபாடு அடைவதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.

திருச்சி புகையில்லா போகி

அதனைக் கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை பண்டிகையை கொண்டாட மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மலைக்கோட்டை

இதன்படிபொது மக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பழைய பொருட்களை இம்மாதம் 14ம் தேதி வரை சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் அல்லது நுண்ணுர செயலாக்க மையத்தில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதன் மூலம் புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி முழு ஒத்துழைப்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web