71000 பேருக்கு பணி நியமன ஆணை!! இன்று பிரதமர் மோடி வழங்குகிறார்!!

 
மோடி


இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை  அளிப்பதை உறுதி செய்யும் வகையில் ரோஸ்கர் மேளா திட்டம்  கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதிகாரங்கள் சரியான முறையில் இளைஞர்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்தும் வருகின்றன.  தேசிய அளவில் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடி
இந்நிலையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த கடிதங்களை பிரதமர் மோடி வழங்குவார் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு  பணி நியமனம் பெற்றவர்களிடம் மோடி சிறப்பு உரை நிகழ்த்த இருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்வு இன்று  காலை 10:30 மணிக்குத் தொடங்க உள்ளது. 

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!
இன்று வழங்கப்படும் பணி ஆணைகளை பொறுத்தவரை  நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பணியாளர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், ஸ்டெனோகிராபர்கள், இளநிலை கணக்காளர்கள், இந்திய அஞ்சல் அலுவலக பணி, வருமான வரி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு வகையான பணிநிலைகளில் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டு  ரோஸ்கர் மேளா திட்டத்தின் தொடக்க விழாவிலேயே முதல் கட்டமாக 75,000 பேருக்கு அரசுப் பணிகளுக்கான பணிநியமன ஆணைகள் கொடுக்கப்பட்டன என்பது  குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web