மாணவர்களே தயாரா?! சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!! முழு தகவல்கள்!!

 
சிபிஎஸ்இ

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 2 பகுதிகளாக நடத்தப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டில் தொடக்கம் முதலே நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது சிபிஎஸ்இ  வாரியம் 2022-23ம் ஆண்டுக்கான 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ 2023 தேர்வு பிப்ரவரி 15, 2022 முதல் தொடங்கி ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறும். அதேபோல் 10ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

இதற்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbse.gov.in ல் சரிபார்த்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஏற்கனவே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில்  12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 16 லட்சம் மாணவர்களும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை  18 லட்சம்  மாணவர்களும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஓவியம், ராய், குருங், தமாங், ஷெர்பா மற்றும் தாய் தாள்களுடன் தொடங்கி, கணித அடிப்படைத் தாள்களுடன் முடிவடையும். அதேபோல், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொழில்முனைவோர் தாளில் தொடங்கி உளவியல் தாளுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும்  கடந்த சில நாட்களுக்கு முன் செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி தொடங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. அதன்படி 2023 ஜனவரி 2 முதல் 14ம் தேதிக்குள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதே தேதிகளில் மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், அகமதிப்பீடுகள், ஆகியவற்றுக்கான மதிப்பெண்களையும் பள்ளிகள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவை குறித்த முழுமையான தகவல்களுக்கு cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web