9 காளைகளை அடக்கிய அரவிந்த் உயிரிழப்பு!! சோகத்தில் தமிழகம்!!

 
அரவிந்த்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த  ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர்

ஜல்லிக்கட்டு

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி மாடு பிடி வீரர்கள் பரிசுகளை பெற்றுவருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருநாளில்  மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.அந்த வகையில் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார்.  மாடுபிடி வீரர்கள்  சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில்  கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு மாடுகள்

காளைகளும்  வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றன.  மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர். இந்நிலையில் பாலமேட்டில்  9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இவர் உடனடியாக மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web