அட்ராசிட்டி!! தங்கத்தாலி, கட்டில் , மெத்தை 49 வகை சீர்வரிசை!! 23 ஜோடிக்கு இலவச திருமணம்!!

 
திருமணம்


கல்யாணத்தை பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்பது பழமொழி. ஏழை, நடுத்தர மக்களுக்கு கல்யாணம் என்பது இன்றளவும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சீர்வரிசைப் பொருட்கள், கோவில்களில் அவசர மருத்துவ சேவை மையம் என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருமணம் கல்யாணம் கும்பம்

அந்த வரிசையில் இலவச சீர்வரிசை பொருட்களுடன் ஏழைகளுக்கு இலவச திருமணமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில்  தனியார் கல்லூரி ஒன்றில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 23  ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  தலைமையில் வீட்டுவசதி துறை அமைச்சர் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குழந்தை திருமணம்

இந்து அறநிலையத்துறை சார்பில்  இவ்விழாவில் திருமணம் செய்து கொண்ட 23 ஜோடி மணமக்களுக்கு  3 கிராம் எடையில் தங்கத்தில்  திருமாங்கல்யம், கட்டில், மெத்தை, தலையணை, குத்து விளக்கு, பாத்திரங்கள், பழவகைகள் என 49 வகையான இலவச சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன்  திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web