ஜனவரி 1 முதல் பள்ளிகளில் “ஆப் ” மூலம் வருகைப்பதிவு!! தமிழக அரசு அதிரடி!!

 
மாணவர்கள் செயலி

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை கொண்டுவர பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, மாணக்கர் நலன், நல்லொழுக்க வகுப்புக்கள், இளம் சிற்பி  , காலை சிற்றுண்டி, அறிவியல் உலகம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில்  உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப் பட்டுள்ளன.  அத்துடன் பள்ளிகளையும் மேலும் நவீனப்படுத்தும் வகையில் தொழில்நுப்ட அடிப்படையிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் செயலி

அந்த வகையில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதே முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பணிபுரியும் ஆசிரியர்கள் , பணியாளர்கள், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய  TNSED Schools என்ற செயலி  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி  மூலம்  மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகையினை எளிமையான முறையில் பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறதா? பள்ளிக் கல்வித்துறை !

தற்போது இந்த முறை  தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறை ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இது குறித்த விளக்கங்களை மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web