உஷார் மக்களே... வலுப்பெற்றது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! விரைந்த மீட்பு படையினர்!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

உஷார்  மக்களே... குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்த நிலையில், இன்று இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வலுவடைந்து புயலாக உருவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

p

 தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.  இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடை கூடும் என்றும்,  அதன் பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலையில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வந்தடைய கூடும் என்றும் தெரிவித்திருந்தது வானிலை ஆய்வு மையம்.

மழை

இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் நிலை கண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.  முன்னெச்சரிக்கையாக ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்பு குழு வீரர்கள் விரைந்துள்ளனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web