அவெஞ்சர் நடிகர் கவலைக்கிடம்!! ரசிகர்கள் பிரார்த்தனை!!

 
ஜெரமி ரென்னர்

ஹாலிவுட் நடிகர்களில்  தமது தனிப்பட்ட நடிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் 2008ல் வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதே போல் ‘தி டவுன்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். மேலும் ஹாலிவுட்டின் மார்வல் சீரிஸ் படங்களான ‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படங்களில் ஹாவ்க்  கதாபாத்திரங்களில் நடித்ததால் பெரும் புகழ் பெற்றவர்  நடிகர் ஜெர்மி ரென்னர்.

ஜெரமி ரென்னர்


 புத்தாண்டு ஜனவரி 1 ம் தேதி அமெரிக்காவில்  பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதனால்  ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. இதனை பற்றி எதுவுமே அறியாத ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஜெர்மி ரென்னர் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில்  கடும் குளிர் காற்றுடன் ஏற்பட்ட பனிப்பொழிவால், கட்டுப்பாட்டை இழந்த ரென்னரின் கார் சாலையோரம் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

ஜெரமி ரென்னர்


 உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்த ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், ‘விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளது. அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web