அரங்கனைக் காண குவிந்த அய்யப்ப பக்தர்கள்! பகல்பத்து 4ம் நாள் திருவிழா!

 
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கன் ரங்கநாதன் பெருமாள்

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி நம்பெருமாள் புறப்பாடு பெருவிழா பகல் பத்து நான்காம் திருவிழாவில் அருள்மிகு அரங்கநாத சுவாமி  நாச்சியார் திருமொழி    கண்ணன் என்னும் கருந்தெய்வம்  பாசுரத்திற்கு ஏற்க , ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம் , மகரி, சந்திர ஹாரம், வயிர 3  அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை   முன் மார்பில் சாற்றிக் கொண்டு, 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கன் ரங்கநாதன் பெருமாள்

பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானம் இருந்து அரையர்கள் அபிநயத்தோடு இசைக்கும் தீந்தமிழ் திவ்ய பிரபந்தத்தின் திருமொழிப் பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கன் ரங்கநாதன் பெருமாள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ கட்டுப்பாடுகள் காரணமாக கடும் கெடுபிடிகள் இருந்த நிலையில் இந்தாண்டு அப்படி இதுவரை இல்லை என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் உள்ளூர் மக்களும் அதிக அளவில் அரங்கனை சேவித்து ஆசீர்வாதம் பெற்று வருகிறார்கள்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web