பாஜக துணைத்தலைவர் வெட்டிக்கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்!

 
கலிகண்ணன்

தமிழகத்தில் வன்முறை, சட்ட ஒழுங்கு, பாலியல் குற்றங்கள் சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலுமே கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தமும், பேராசையும் இதற்கு முக்கிய காரணங்களாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். பாஜக துணைத் தலைவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலைச் செய்துள்ளது. திருப்பத்தூர் நகர பகுதி பாஜக துணை தலைவராக இருந்து வந்தவர் கலிகண்ணன். இவர் நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் சடலமாக கண்டறியப்பட்டார். இச்சம்பவம் தொண்டர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

அடித்தே கொலை
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி கலிகண்ணனை  மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் நேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எப்போது, எதற்காக இந்த கொலை நடந்தது? கொலையை யார் செய்திருப்பார்கள்? முன் விரோதம், அரசியல் பகை, பதவி சண்டை  என பல கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web