BREAKING!! ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உடல் நலக்குறைவால் காலமானார்!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
ஈவிகேஎஸ்

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருடைய  மூத்த மகன் 46 வயதான திருமகன் ஈவெரா.  இவர் தற்போதைய  தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். இவர் 2021ல்  நடைபெற்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  இவர் ஈரோட்டிலேயே தங்கியிருந்து தொகுதி பணிகளை கவனித்து வந்தார்.

ஈவிகேஎஸ்
கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவருக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை முதல் திருமகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. பிற்பகல் 12.45 மணிக்கு  சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rip

இதனையடுத்து  கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக  ஈரோட்டில்  அவரது  இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் 2000 முதல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். 2006-2010ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், 2014-2017 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web