BREAKING!! மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் ரூ1500ஆக அதிகரிப்பு!! முதல்வர் அதிரடி!!

 
பணம்

இன்று டிசம்பர் 3 அதாவது  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் . மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகளை முதல்வர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி

அத்துடன் அவர் ஆற்றிய உரையில் தற்போது  மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.1,500 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த ஓய்வூதியம் வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உட்பட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன்  மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல தேவையில்லை.  வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழல் உருவாக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள்

இந்த நடைமுறை ஜனவரி முதல் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், நவீன உபகரண கண்காட்சியை  தொடங்கி வைத்தார். அவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.   6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினியையும் முதல்வர் வழங்கினார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web