7செமீ வாலுடன் பிறந்த பெண்குழந்தை!! வைரலாகும் புகைப்படம்!!

 
வால் குழந்தை

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் வடகிழக்கு ஊரக பகுதியில் அமைந்துள்ள  மருத்துவமனையில் 20 வயதான தாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு  பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று இருந்தது. உருளை வடிவில் காணப்படும் அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்தது. குழந்தைக்கு 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.  மருத்துவ  அதிசயமாக இந்த வால் குழந்தை பார்க்கப்படுகிறது.

வால் குழந்தை
கருப்பையில் உருவாகும் அனைத்து குழந்தைகளுக்கும் வால் முளைக்கலாம் என கருதப்படுகிறது. அந்த பகுதி மீண்டும் உடலில் மீண்டும் உறிஞ்சப்பட்டு விடும். இந்த வால்  எலும்பாக உருவாகி விடுகிறது.இதனால் வால் போன்ற அமைப்பு மறைந்துவிடுகிறது. இந்த குழந்தைக்கு அந்த சதை அப்படியே தங்கிவிட்டது. அதனால் பிறக்கும்போதும் வால் அமைப்பு இருந்திருக்கலாம் என  மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.



உண்மையான வால் என்பது மிகவும்  மருத்துவ உலகில் மிகவும் அரிதானது. 2017 ல் இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு 195 நிகழ்ந்தன. அந்த வாலின் நீளம் 20 செமீ ஆக இருந்தது. அவை பெரும்பாலும் ஆண் குழந்தைகளிடமே காணப்பட்டன.

வால் குழந்தை

இப்படி பிறக்கும் 17 குழந்தைகளில் ஒன்று மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் இதுவென்பதை மருத்துவ உலகம் இதுவரை உறுதி செய்யவில்லை. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web