பகீர்!! 60 மாணவிகள் 17கிமீ தூரம் நள்ளிரவில் நடந்தே சென்று கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!

 
மாணவிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் குண்ட்பானியில்  செயல்பட்டு வருகிறது. கஸ்துார்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி . விடுதியுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பழைய உணவு அளிப்பது, கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது,கடும் குளிரிலும் தரையில் படுக்கச் சொல்வது என மாணவிகளை கொடுமை படுத்தியதாக அடுத்தடுத்து புகார்களும், குற்றச்சாட்டுக்களும் வைக்கப்பட்டன.

மாணவிகள்

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இதனால் +1 படிக்கும்  60க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று கூடி  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஜனவரி 16ம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவில் கிளம்பி 17 கிமீ நடந்தே சென்று ஆட்சியர் அலுவலகத்தில் விடுதியின் அட்டூழியங்கள் குறித்து துணை ஆணையரிடம் புகார் அளித்தனர். நள்ளிரவில் கிளம்பிய 60 மாணவிகளும் காலை 7மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்.  புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆணையர்  மாவட்ட கல்வி அதிகாரியை அழைத்து உடனடியாக  வார்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

போலீஸ்

பள்ளி  மாணவிகளின் இந்த செயல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  துணை ஆணையர் உத்தரவின் பேரில், உடனடியாக மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் அவர்களை பாதுகாப்பாக  வாகனங்களில் பள்ளிக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.  அத்துடன் இதுகுறித்து விசாரணை நடத்தி வார்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவிகளிடம் உறுதி அளித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web