பகீர்!! கோவில் ராஜகோபுரத்தில் திகுதிகுவென பற்றி எரிந்த தீ!!

 
கோவிலில் தீ

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்  பத்ரகாளியம்மன் கோயில். இந்த கோவிலில் கும்பாபிஷேக பணிக்காக தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 6 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணிகள் காரணமாக  ராஜகோபுரம் தென்னங்கீற்று, பின்னப்பட்ட ஓலைகள் மற்றும் பிளாஸ்டிக் தார்ப்பாய்களால் மறைக்கப்பட்டிருந்தது.

கோவிலில் தீ
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரில் கல்யாணம், காதுகுத்து, சடங்கு வைபவங்கள் நடைபெற்றாலும் சீர்வரிசை பொருட்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல் திருமண  சீர்வரிசை பொருட்கள் எடுத்துச் செல்ல  திருமண வீட்டார் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது உயரே எழுந்த தீப்பொறி காற்றில் பறந்து ராஜகோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்ப்பாயின் மீது விழுந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ மள மளவென பரவத்தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓலைகீற்றுகளிலும் தீ   ராஜகோபுரத்தை சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

கோபுரத்தில் ஏற்பட்டதீவிபத்து குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள், கோயிலின் ராஜகோபுரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரப்போராட்டத்துக்கு பின் தீ முற்றிலும்  அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து  குறித்து  சிவகாசி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசியில் பிரசித்திப் பெற்ற கோயிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

From around the web