பகீர்!! கர்ப்பிணி நாயை துடிக்க, துடிக்க கொலை செய்த கல்லூரி மாணவர்கள்!!

 
நாயை அடிக்கும் வீடியோ

நெஞ்சே பதறுதே.. கர்ப்பமாக இருந்த நாயை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற இளைஞர்கள்.. சிரிப்பு வேற
இன்றைய இளைஞர்கள் தேவையற்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் லைக்குகளை தேடி வருகின்றனர்.  வீட்டு விலங்கினங்களில் நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு வேளை உணவு போட்டாலும் கூட நம்மை சுற்றி சுற்றி வந்து வாலை ஆட்டும்.  நாய் அளவுக்கு வேறு எந்த விலங்கும் விசுவாசமாக இருக்காது.
நாய்களை வீட்டில் உள்ள ஒருவர் போல பார்த்து கொள்வது மிகச்சிலர் தான். சில கொடூர மனம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் தான் தலைநகர் டெல்லியில் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாயை அடிக்கும் வீடியோ
டெல்லியில் பிரபலமான கல்லுரி வளாகத்திற்குள் கர்ப்பமாக இருந்த தெருநாய் ஒன்று நுழைந்தது. அந்த நாய், குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி மாணவர்கள் அடித்துக் கொல்ல முடிவு செய்தனர்.  கையில் கிடைத்த இரும்பு ராடுகள், பேஸ்பேல் பேட், மரக்கட்டைகளுடன் நாய் பதுங்கியிருந்த ஷெட்டை சுற்றி வளைத்தனர்.  ஒரு மாணவன் மட்டும் நாயை கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்ல மீதமுள்ள மாணவர்கள் சிரித்துக் கொண்டே இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவில்  துடிதுடிக்க இறந்து போன அந்த நாயின் காலை பிடித்து ஒருவர் வெளியே இழுத்து போடுகிறார்.

நாயை அடிக்கும் வீடியோ
இந்த வீடியோ பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . அதன்படி  மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் வாட்ச்மேன் சொல்லித் தான் இந்த செயலை புரிந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  இது  குறித்து பிராணிகள் நல அமைப்பு "இளம் மாணவர்களின் இந்த செயல் வேதனை அளிக்கிறது. மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web