பகீர்!! நூல் வழியே பாய்ந்த மின்சாரம்!! பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவன் உடல் கருகி பலி!!

 
அபுபக்கர்

சிறுவர்களின் விளையாட்டு சில நேரங்களில் வினையாகி விடுகிறது. என்னதான் கண்ணும்கருத்துமாய் வளர்த்தாலும் சில நேரங்களில் அவர்களே ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவன் உடல் கருகி பலியாகியுள்ளான். கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வரும் சிறுவன் 11 வயது அபுபக்கர்.  இவர்  வீட்டு அருகே உள்ள பூங்காவில் நூலில் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

பட்டம்

காற்றின் வேகத்திற்கேற்ப காற்றாடி மேலே மேலே பறந்து கொண்டே சென்றது. சிறுவன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். இதனால் பட்டம் அருகே இருந்த மின் அழுத்த கம்பிக்கு மேலே பறப்பதை கவனிக்கவில்லை. காற்றாடியின் நூல் எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் லேசாக உரசிவிட்டது . அவ்வளவு தான் . பட்டத்தை கையில் பிடித்திருந்த சிறுவனை மின்சாரம் தூக்கி வீசியது.  

பகீர் ரிப்போர்ட்!! கை கால்களை வெட்டி வீசிய 14 வயது சிறுவன்!!

கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்க, சம்பவ இடத்திலேயே சிறுவன் உடல் கருகி பலியானான். பார்க்கில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபுபக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடியில் சடலமான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web