பகீர்.. ஒரே நாளில் 420 பேர் மரணம்! அதிகரிக்கும் கொரோனா பரவல்!

 
கொரோனா

உலகம் முழுவதும் மீண்டும் அசுர வேகத்தில்   பரவி வரும் கொரோன தொற்று ஜப்பானை வாட்டி வதைத்து வருகிறது. உருமாறிய புது வகையான கொரோனா தொற்றினால், நேற்று ஒரே நாளில் மட்டும் ஜப்பானில் 420 பலியாகி உள்ளனர். ஜப்பானில், பதிவான கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்படுகிற உயிரிழப்புகளில் இது தான் அதிகபட்ச எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

Japan

இந்த நிலையில் ஜப்பானில் நேற்று (டிச. 29) ஒரே நாளில் மட்டும் 420 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுதான் ஜப்பானில் ஒரு நாளின் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,000-ஐ தொட்டுள்ளது. ஜப்பானில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதன்கிழமை பதிவான பாதிப்பை விட 24,146 குறைந்துள்ளது. டோக்கியோவில் புதிதாக 18,372 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை பதிவான பாதிப்பை விட 1,871 குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web