பகீர்.. கல்லூரி மாணவிகளின் கழிவறையில் கேமிரா! 1200 ஆபாச வீடியோக்கள்! மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!

 
செக்ஸ் பாலியல் க்ரைம் ஆபாசம் கற்பழிப்பு

தனியார் கல்லூரி ஒன்றின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்தது பெங்களூருவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பெங்களூரு கிரிநகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரபலமான இந்த கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவிகள் சிலர் கழிவறைக்கு சென்று திரும்பும் போது, கழிவறையின் அருகே கல்லூரிக்கு சம்பந்தமில்லாத இளைஞர் ஒருவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து மாணவிகள் புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இனி இந்த இடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்!

கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கழிவறைக்குள் இருந்து தப்பி ஓடியது அதே கல்லூரியில் 3ம் ஆண்டு பிபிஏ மாணவர் ஆசாத்  என்பது உறுதி செய்யப்பட்டது.  அவரை பிடித்து விசாரித்ததில் ஆசாத் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பேசியது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் மாணவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்களை ஆசாத் ஒப்புக் கொண்டான். அவன் அளித்த வாக்கு மூலத்தின் படி மாணவிகளின் கழிவறையில் சுபம் ஆசாத் ரகசிய கேமரா பொருத்தியதும், அந்த ரகசிய கேமரா மூலம் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.

போலீஸ்

இதனால் அந்த கல்லூரிக்கு சென்ற போலீசார் ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். மேலும் சுபம் ஆசாத்தின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது செல்போனில் 1200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. சுபம் ஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது கண்டறியப்பட்டு கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரித்தது. அப்போது அவர் கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டதால் ஆசாத் மீது புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web