பாமக செயல்வீரர் நல்லையன் காலமானார்!! மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!!

 
நல்லையன்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில்  பாமக  செயல்வீரர் ஜம்பை நல்லையன். இவருக்கு 87. இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின்  மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பில்  "ஈரோடு வடக்கு மாவட்டம் ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட நல்லிப்பாளையத்தில் வசித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர் நல்லையன் காலமானார் என்ற  தகவல் கிடைத்ததும் மிகுந்த வேதனையடைந்தேன்.

ராமதாஸ்
நல்லையனுக்கு 87 வயதானாலும் இளைஞரை போலவே  துடிப்புடன் கட்சி பணி செய்து வந்தார். வன்னியர் சங்கம் தொடங்கிய தினத்தில் இருந்தே  முதலில்  சங்கத்திலும், பின்னர் கட்சியிலும் இணைந்து பணி செய்தவர். அத்துடன் இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் அறிவிக்கப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். கட்சி மீது மட்டுமல்ல என் மீது மிகுந்த பற்று உடையவர்.  

rip
நல்லையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்"  என தமது  இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web