உண்மை கண்டறியும் சோதனைக்கு தடை!! மனித உரிமைகள் ஆணையம் அதிரடி!!

 
ராமஜெயம் கொலை வழக்கு


2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் நாள் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர், கே.என். ராமஜெயம் நடைபயிற்சி செல்லும் பொழுது படுகொலை செய்யப்பட்டது ஊரறிந்த ரகசியம், உள்ளூர் காவல்துறை முதல் உலக காவல்துறை அதாங்க நம்ம சிபிஐ வரை ஒரு ரவுண்டு வந்து தற்பொழுது மீண்டும் தமிழக காவல்துறையின் எஸ்.ஐ.டி வசமே வந்து நிற்கிறது. துப்பு கொடுத்தால் ஐம்பது லட்சம் சன்மானம் என ஆயில் போஸ்டர் ஊருக்கு ஊரு அலப்பறை கொடுத்துக்கொண்டிருக்க, தற்பொழுது எஸ்.ஐ.டி எனப்படும் ஸ்பெஷல் டீம் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள் தற்பொழுதைய நிலவரப்படி...

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். சத்யராஜ், திலீப் (எ) நாராயணன், சாமிரவி, ராஜ்குமார், சிவா (எ) குண சேகரன், சுரேந்தர், கலை வாணன், மாரிமுத்து, தென்கோவன் என்கின்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோரிடம் உண்மை கோர்ட் கண்டறியும் சோதனைக்கு சம்மதம் கேட்ட நிலையில் தென்கோவன்(எ) சண்முகம் மட்டும் மறுத்துவிட்டார். சரி மறுத்தவர் யார்  அவருடைய பின்புலம் என்ன ?


தென்கோவன் ? ஏற்கனவே அவர் மீது மூன்று கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் யாருக்கும் தலை வணங்காத ஜெயலலிதா திருச்சி சிறைச்சாலைக்கு சென்று பார்த்த பிரபல புள்ளி குடவாசல் ராஜேந்திரனின் மகன் தான் இந்த தென்கோவன். குடவாசல் ராஜேந்திரனின் கோட்டை என்கிறார்கள் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜேந்திரனின் இரண்டு மகன்களில். முதல் மகன் அரசன்கோவன், 10-வது வார்டில் போட்டியிட்டார்.. இவரின் மனைவி காயத்ரி 6-வது வார்டில் போட்டியிட்டார்.. இரண்டாவது மகன் தென்னன்கோவன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவரா இருக்கிறார்.

ராமஜெயம் கொலை வழக்கு

இவரின் மனைவி கீர்த்தி 9-வது வார்டுல போட்டியிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக வலம் வந்தவர் குடவாசல் ராஜேந்திரன். அ.தி.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். உட்கட்சி பூசலால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குடவாசல் ராஜேந்திரன் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். 


இவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படவில்லை சரி இனி என்னவாகும் வழக்கு ? வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம் உண்மை கண்டறியும் சோதனைக்கு மனித உரிமைகள் ஆணையமே தடை விதித்து இருக்கிறது, சம்பந்தப்பட்டவர் நபரின் அனுமதி பெறாமல் எடுக்கவே இயலாது. அல்லது குற்றவாளி குறித்து முக்கிய ஆதாரம் காவல்துறை கைகளில் இருக்க வேண்டும் என்றார்.  ஆக மீண்டும் கிணற்றில் போட்ட கல்தானா ?

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web