அதிர்ச்சி!! ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை!! கதியின்றி தவிக்கும் பெண்கள்!!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான  கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தனியாக வெளியிடங்களுக்கு பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணிக்க நேர்ந்தாலும் ஆண்களின் துணை அவசியம்.உயர்கல்வி பெற உரிமையில்லை. தொலைக்காட்சி, சினிமா நிகழ்ச்கிகளில் பெண்கள் நடிக்க அனுமதி மறுப்பு என தொடர் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான்

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எதையும் கண்டுகொள்வதாக இல்லை. அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளும், குற்றங்களும் அதிகரிப்பதை தடுக்க வழியில்லை என்கின்றனர் அங்கு வசித்து வரும் பெண்கள்.  அந்த வரிசையில் தற்போது  ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம்  சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்

இந்த உத்தரவின் படி  பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாகாண மருத்துவமனையிலும் இவை கண்காணிக்கப்படும். இதற்கான தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர திடீர் பரிசோதனை நடைபெறும். கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் கடும் தண்டணை வழங்கப்படும் என தாலிபான்கள் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


பெண்கள் கல்வி கற்க தடை,பெண்கள் கார்  போன்ற  வாகனங்கள் ஓட்ட தடை, பூங்கா மற்றும் கேளிக்கை பகுதிகளுக்கு செல்ல தடை, ஹிஜாப் இல்லாமல் பொதுவெளியில் சென்றுவர தடை என பல்வேறு தடை உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டுள்ளன.  ஐநா  உட்பட  சர்வதேச அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் மீறி தாலிபான் அரசு இதுபோன்ற உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web