ஆன்லைன் ரம்மிக்கு தடை! தமிழக அரசின் அவசர சட்டம் காலாவதியானது!

 
ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி

நேற்றுடன் தமிழக அரசு விதித்திருந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடை குறித்த அவசர சட்டம் காலாவதியானது. இன்று முதல் தமிழகத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாட தடை இல்லாதது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி பலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலைச் செய்து கொள்கின்றனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழக அரசு விதித்திருந்த அவசர சட்டம், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் நேற்றுடன் காலாவதியானது. அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் மனித சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முதலில் வெறும் பொழுது போக்கிற்காக இலவசமாக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடத் தொடங்குகின்றனர்.

இதன் காரணமாக, பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆன்லைன் ரம்மி

இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர்.

இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதல்வர் அவர்களிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. 

Rummy

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு  வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் தற்போது காலாவதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா இன்னமும் அமலுக்கு வராத காரணத்தால் பலரும் அதில் விளையாடி பணத்தை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web