நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்! 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாது!

 
அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

வருஷம்  பொறந்து முழுசா ஒரு மாசம் கூட முடியலை.. வருஷத்தின் முதல் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடிய மனநிலையில், இந்த மாத கமிட்மெண்ட்களை மனசுல வரவழைச்சுக்கோங்க.. சரியா திட்டமிட்டுக்கோங்க.. இந்த மாத கடைசியில வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறாங்க. இந்த 2 நாள் வேலை நிறுத்ததினால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 30 மற்றும் 31ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். விஷயம் இது தான். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து மும்பையில் நடைப்பெற்ற வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரி 30, 31ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!
அதற்கு முந்தைய இரு தினங்களும் வங்கி விடுமுறை தினங்களாக அமைந்திருக்கின்றன. அதாவது ஜனவரி 28ம் தேதி மாதத்தின் 4ம் சனிக்கிழமை விடுமுறை தினம். அடுத்த நாளான ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  பொதுவான விடுமுறை தினம், ஜனவரி 30ம் தேதி  திங்கட் கிழமை, ஜனவரி 31 செவ்வாய் கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சம்பள உயர்வு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, புதிய ஊழியர்களை தேர்வு செய்வது, ஓய்வூதியத்தில் மாற்றம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web