பகீர் வீடியோ!! ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உடல் கருகி பலி!!

 
ஹெலிகாப்டர் விபத்து

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக  அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நவீன ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை சமாளித்து முன்னேறத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து போர் நடந்து கொண்டே இருப்பதால் உக்ரைனில் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. ரஷ்யாவும் போரில்  பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.


இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பி வருகிறது.இந்நிலையில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.

உக்ரைன் உள்துறை அமைச்சர்

அப்போது  தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பள்ளி மீது மோதி விமானம் கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், உக்ரைனின்  உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web