பகீர் வீடியோ!! தடம் புரண்ட சரக்கு ரயில்!! விஷ வாயு கசிந்து 51 பேர் கவலைக்கிடம்!!

 
சரக்கு ரயில்

தென்கிழக்கு செர்பியாவில் அம்மோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அமோனியா வெளியே சிதறி காற்றில் கலந்து விஷவாயுவாக மாறி பொதுமக்களை தாக்கியுள்ளது.  காற்றில் கலந்த அமோனியா விஷ வாயுவை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறலால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  


இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அண்டை நாடான பல்கேரியாவிலிருந்து கொண்டு அமோனியா ஏற்றி வந்த 20 பெட்டிகள் கொண்ட ரயில், நேற்று மாலை தென்கிழக்கு செர்பியாவில் பைரோட் நகரத்தில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் விஷவாயு தாக்கி 51 பேர் பாதிக்கபட்டுள்ள  நிலையில்   7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்  60000  பேர் வசிக்கும் நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது,

சரக்கு ரயில்

மேலும் பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து பிரோட்டின் மேயர் விளாடன் வாசிக் விடுத்த செய்திக்குறிப்பில்  தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்த அமைச்சகம் விசாரணை  கமிஷன்களை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  நிஸ் முதல் டிமிட்ரோவ்கிராட் வரையிலான ரயில்வேயின் திட்டமிட்ட புனரமைப்பு ஏன் தாமதமானது  என தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web