பகீர் வீடியோ!! ஆற்றில் கவிழ்ந்த பேருந்து!! 6 பேர் பலி!! 3 பேர் கவலைக்கிடம்!!

 
விபத்து

ஸ்பெயின் நாட்டில்  லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.


அந்த வழியாக சென்றவர்களில் ஒருவர் பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதை பார்த்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது குறித்து அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார் . 
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர்  பலியாகினர்.

விபத்து

3 பேர் படுகாயம் அடைந்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழை காரணமாக உடல்களை மீட்கும் முயற்சி தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!