குற்றாலத்தில் குளிக்க தடை!! சோகத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!!

 
குற்றாலம்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் சுற்றுலா தளங்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நீர்நிலைகளில் குளிக்கவும், கும்மாளமிடவும் தான் முதல் சாய்ஸ் என்கின்றனர் இளசுகள்.தமிழகத்தில் மாண்டஸ் புயல் மற்றும் அடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு  பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

குற்றாலம்

இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.  அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் ,கடையநல்லூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் குற்றால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதாக மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.  மெயின் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம்


பழைய குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தருவி பகுதியில் மட்டும் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் அந்த பகுதியில் மட்டும் சுற்றுலாப்  பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரான பின்பு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.  மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் விடுமுறைக்கு குற்றாலம் சென்ற மக்கள் சோகத்துடன் திரும்பி வருகின்றனர். 
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web