உஷார்!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!! வங்கிப் பணிகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

 
வங்கி வேலைநிறுத்தம்


இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மும்பையில் நேற்று வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜனவரி 30, 31ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வங்கி
ஜனவரி 28ம் தேதி மாதத்தின் 4ம் சனிக்கிழமை, அடுத்த நாள் 29 பொதுவான விடுமுறை ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி 30 திங்கட் கிழமை, ஜனவரி 31 செவ்வாய் கிழமை என தொடர்ந்து 4 நாட்கள்  வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!


வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சம்பள உயர்வு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, புதிய ஊழியர்களை தேர்வு செய்வது, ஓய்வூதியத்தில் மாற்றம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web