உஷார்..! பழனிக்கு செல்ல பாஸ் அவசியம்! எப்படி முன்பதிவு செய்வது?

 
பழநி முருகன்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 27.01.2023-ம் தேதியன்று காலை 8.00 மணி முதல் 9.30 மணி முடிய நடைபெறவுள்ளது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2000 எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இத்திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் இத்துறை வலைதளமான www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களின் மூலம் பக்தர்கள் 18.01.2023 முதல் 20.01.2023 முடிய கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டணமில்லா முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் கீழ்க்கண்ட ஏழு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை ஆளறிதல் சான்றாக (Photo ID Proof) கொண்டு வர வேண்டும். 

1. நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (PAN CARD)

2. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

3. பாஸ்போர்ட் (Passport)

4. நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு (Bank Pass Book)

5. ஓட்டுநர் உரிமம் (Driving License)

6. குடும்ப அட்டை(Ration Card)

7. தேசிய அடையாள அட்டை (Aadhaar Card) சான்றிதழ்கள்.

பழநி

தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

21.01.2023 b தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு (Confirmed Message) பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும்/கைபேசி எண்ணிற்கும் 22.01.2023.ம் தேதி அனுப்பப்படும்.

பழநி முருகன்

 உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்/குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23.01.2023 தேதி முதல் 24.01.2023 தேதி வரை உள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்றிதழ்கள் நகல் கொண்டுவந்து பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இரயில்வே பீடர்ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் கட்டணமில்லா சீட்டினை பெற்று கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோர்களுக்கு வழங்க இயலாது.

இந்த அனுமதி சீட்டு கம்பிவட ஊர்தி (Ropecar), மின் இழுவை இரயில் (Winch) சேவைக்கு பொருந்தாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web