உஷார்!! தீவிரமாகும் மாண்டஸ்!! இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!!

 
புயல்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. 26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேருந்து, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்கு 270 கி.மீ.  தொலைவில்  நிலைகொண்டுள்ளது

இந்தப்  இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள்  கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று   தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.  அதன்படி புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு செல்லலாம்.

அவசியமற்ற தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். 

முக்கியமான பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவசர தேவைக்கு டார்ச்லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

வானிலை பற்றிய தகவல்களை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.  வதந்திகளை நம்பக் கூடாது.

பாதுகாப்பற்ற நிலையிலும் இடியும் நிலையிலும் உள்ள கட்டிடங்களிலும் மரங்களுக்கு அடியிலும்  தஞ்சம் புகக் கூடாது.

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். 

பாதுகாப்பு நடவடிக்கைகள்

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்க வேண்டும். படகு இயந்திரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

புயல் ஓய்ந்து விட்டது என கருதி வெளியே வரக் கூடாது. எதிர் திசை காற்று அடித்து ஓய்ந்த பிறகே வெளியே வர வேண்டும்.

வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். பால், ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களை போதுமான அளவில் வீட்டில் வைத்திருக்க வேண்டும்

காரணமின்றி வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். 

அறுந்து விழுந்த நிலையில் மற்றும் தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைக்க வேண்டும்

நீர்நிலைகள், மரங்களுக்கு அருகில் நின்று செல்பி எடுக்கக் கூடாது.

அவசர தேவைகளுக்கு மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்களை உடனுக்குடன் அணுக வேண்டும். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web