உஷார்! இன்று இரவு இங்கே எல்லாம் போய் சிக்கிக்காதீங்க! போலீசார் அதிரடி!

 
மக்களே குறிச்சிக்கோங்க!! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை !! முதல்வர் அதிரடி!!

புதுவருஷத்தை சந்தோஷமா கொண்டாடுங்க. வருஷத்தோட முதல் நாளே எரிச்சலடைகிற மாதிரி டேக் டைவர்ஷன்னு உங்க கொண்டாட்டத்துல நோ எண்ட்ரியிலோ, மாற்று பாதையிலோ சென்று மாட்டிக்காதீங்க. உங்க குடும்பத்தோட பாதுகாப்பா புத்தாண்டைக் கொண்டாடுங்க. ரிஸ்க் எடுக்க இது சினிமா கிடையாது. உங்களோட வாழ்க்கை..  யோசிச்சுக்கோங்க. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் கொரோனா குறித்த அச்சம் தேவையில்லை. அதே நேரத்தில் கவனத்துடன், பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட வேண்டும் என போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடற்கரை மணல் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைநகரமாம் சென்னையில் புத்தாண்டை வரவேற்கவும் , கொண்டாடவும் மக்கள் பொதுஇடங்களில் உற்சாகத்துடன் ஒன்று கூடுவது வழக்கம். இதனால் பொதுமக்களின் வசதிகளின் அடிப்படையில்  சென்னையில் மெரினா பகுதிகளில் இன்று இரவு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  டிசம்பர் 31ம்தேதி மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடத் தொடங்குவர்.  நடப்பாண்டை பொறுத்தவரை  'உயிரிழப்பு இல்லா புத்தாண்டுக்கு முன்னாள்' என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதன்படி காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கடற்கரை உட்புற சாலை 31ம் தேதி இரவு 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படுகிறது. அதே போல், கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.  அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதி 
  • காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை  இன்று இரவு 8 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும். 
  • அடையாறிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக மாற்றம். 
  • ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலைக்கு மாற்றம். 
  • அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் தெற்கு கால்வாய் சாலை வழியாக  மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக செல்ல வேண்டும். 
  • பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வழியாக என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை அடையலாம். 
  • சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் 31ம் தேதி இரவு 10 மணி முதல் 1ம்தேதி காலை 6 மணி வரை மூடப்படும். 
  • எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு பின்னர் 6-வது அவென்யூ நோக்கி 1ம் தேதி அன்று 6 மணி வரை வாகனங்கள் அனுமதி கிடையாது.
  • 6-வது அவென்யூ, 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்.ஜி. ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை 

போக்குவரத்து மாற்றம்
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துமிடம் 

  • சுவாமி சிவானந்தா சாலை 
  • வாலாஜா சாலை 
  • பாரதி சாலை 
  • பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை. 
  • டாக்டர் பெசன்ட் சாலை 
  • லாயிட்ஸ் சாலை 
  • ராணி மேரி கல்லூரி வளாகம். 

எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்: 

  • பெசன்ட் நகர் 4-வது அவென்யூ 
  • பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோடு 
  • பெசன்ட் நகர் 4-வது மெயின் ரோடு 
  • பெசன்ட் நகர் 5-வது அவென்யூ 
  • பெசன்ட் நகர் 2-வது அவென்யூ 
  • பெசன்ட் நகர் 3-வது அவென்யூ

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து இடங்களிலும் நவீன சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில்  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் இவைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கபடும். அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து  காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web