போட்டிக்கு முன்பாகவே நட்சத்திர வீரர் ரொனால்டோ வெளியேற்றம்! கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ரொனால்டோ

உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் கொண்டாடும் விளையாட்டாக கால்பந்து விளையாட்டு இருந்து வருகிறது. கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரொனால்டோ

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 37 வயதான ரொனால்டோ, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளருக்கும், ரொனால்டோவுக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்து பேட்டியளித்த ரொனால்டோ,  'அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம்' என்று தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்து வெளிப்படையாக தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.


ரொனால்டோவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்திருந்தார்.  தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றப்பட்டதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை ரொனால்டோவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கத்தாரில் தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்திற்கு முன்பாகவே நட்சத்திர வீரர் ரொனால்டோ வெளியேற்றப்பட்டுள்ளது கால்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web