வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாட்டு முறை, பலன்கள்! முழு விபரம்!

 
பொங்கல்

இத்தனை நாட்கள் கஷ்டத்தில் உளன்றோம் என்று புலம்பி கொண்டிருக்கிறீர்களா? மனசு முழுக்க நிறைவோடு தை மகளை உங்கள் இல்லத்தில் வரவேற்று மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள். எப்படி பனி, குளிர் காலம் விலகி வெளிச்சம் வருகிறதோ.. அதைப் போலவே உங்கள் வாழ்விலும் வெளிச்சம் வரும். மறக்காம சூரியனையும் பிரார்த்தனை செய்யுங்க. இன்று தை மாதத்தின் முதல் நாள். தமிழகம் முழுவதுமே அறுவடை திருநாளான இன்றைய தினத்தை பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.  

ஆன்மிக ரீதியாக இன்று உத்திரயாண புண்ணிய காலம் ஆரம்பிக்கும் நாள். நமது முன்னோர்கள் அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைத்தே வைத்திருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக மழையும், பனியும் முடிந்து கோடையை வரவேற்கும் மாதம். நமது உணவிற்கான விளைச்சலை நல்லபடியாய் கொடுத்த சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள். 

பொங்கல்
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எப்படி?


இன்றே வீடு வாசல் சுத்தம் செய்து தலைவாசலில் காப்பு கட்ட வேண்டும்.  பொங்கல் இடத் தொடங்கும் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து நல்லபடியாக பொங்கல் பண்டிகை கொண்டாட சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இஞ்சி, மஞ்சள் கொத்து வைத்து பொங்கல் பானையில் கட்ட வேண்டும். பொங்கல் பானையைக் கிழக்கு நோக்கி வைத்து, அதை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்துகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரையலாம்.  அதன் பிறகே  அடுப்பில் ஏற்றிப் பொங்கல் வைக்க தொடங்க வேண்டும். தற்போது வீட்டுக்கு உள்ளே சமையல் அறையில் கேஸ் ஸ்டவில் பொங்கல் வைக்கின்றனர்.  பொங்கல் எப்படி வைத்தாலும் சூரிய ஒளி விடும் இடத்தில் தான் படையல் இட வேண்டும். படையல் இடும் இடத்தில்  சூரிய சந்திரர்களை வரைந்து  கொள்ள வேண்டும். நாளைய தினம் குறைந்தது 11 முறை சூர்ய காயத்ரி மந்திரத்தை சொல்வது சிறப்பு. 

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல்
இன்று ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தை முதல் நாள் பொங்கல் பண்டிகை. இந்நாளில்  காலை 7.30 மணி முதல் 8.30க்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம். சூரியன் வருகிற நேரத்தில் வரவேற்பது சிறப்பு. தவிர, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை சுக்கிர ஹோரை. 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஹோரை.  2  ஹோரைகளும் சேர்ந்தார்ப் போல 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம்.

சுக்கிரன் அருளால் சுகமான வாழ்வும், புத பகவானின் அருளால் அறிவும் கிடைக்கப் பெற்று வளமான வாழ்வு பெறலாம். இந்த நேரத்தில் வைக்க இயலாதவர்கள் காலை  11 மணி முதல் -12 மணி வரை குரு ஹோரையிலும் பொங்கல் வைக்கலாம்.  குரு ஹோரையில் செய்தால் பொன் பொருள் சேர்க்கை, தானிய சேர்க்கை  அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பொங்கல் பானையில் பொங்கி வழியும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று மங்கல முழக்கம் இட வேண்டும்.  வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, ' பொங்கலோ பொங்கல்' என்று சத்தம் எழுப்புதல் வீட்டிற்குள் நேர்மறையான அதிர்வுகளை அதிகரிக்க செய்யும். நல்ல சிந்தனைகள் வந்து சேரும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web