பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம்! குவியும் அதிருப்திகள்!

 
அசீம்

எங்கேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கரகரத்த கமலின் குரலில் பிக் பாஸ் தமிழில்  முதன்முதலாக அறிமுகமான போது அத்தனை பிரபலமாகவில்லை. ஓவியாவின் அட்ராசிட்டி, ஜூலியின் அழுகாச்சி, வனிதாவின் அடாவடி என்று அடுத்தடுத்து தமிழ் குடும்பங்கள் பிக்பாஸ் சீசன்களில் தொடர்ந்து மூழ்கி கிடந்தனர். இவன் சுத்த மோசம்... அவ என்ன அரை ட்ரவுசர் போட்டுக்கிட்டு இப்படி திரியுறா என்கிற ரீதியில் வீட்டுப் பெருசுகள், சேனலின் டிஆர்பி ரேட்டிங் எகிற, இதெல்லாமே முன்கூட்டியே திணிக்கப்பட்ட காஷ்ட்யூம் ஷெட்யூல்கள் என்பது புரியாமல் புலம்பி வந்தனர். இப்போது ஒருவழியாக பிக்பாஸ் சீசன் 6 முடிவுக்கு வந்திருக்கிறது. யெஸ்.. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அஸிம் தட்டிச்சென்றார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் அத்தனை அதிருப்தி. இதற்கு முன்னர், ஓவியா துவங்கி, ஜெயிச்ச அத்தனைப் பேருக்கும் ஆதரவு இருந்தது போல அசீமுக்கு கிடைக்கவில்லை. அசீமிற்கு எதிராக சின்னத்திரை நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே கருத்து கூறிக் கொண்டிருந்த நிலையில், கடைசி வாரத்தில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில் விக்ரமனுக்கு அரசியல் பிரபலங்கள் சப்போர்ட் கிடைக்க தொடங்கியது.

Bigboss

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தியது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். இது இதுவரைக்கும் நடைபெறாதது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் கடைசி நேரத்தில் அதிகமான பிரபலங்களின் சப்போர்ட்டும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கிடைக்க தொடங்கியது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Bigboss

அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்

From around the web