சினிமா பாணியில் பழிக்கு பழி!! பிரபல ரவுடி ஓட ஓட விரட்டிக்கொலை!!

 
அஸ்வின்

சினிமா பாணியில் கூட்டாளி ஒருவரை  கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக மற்றொரு ரவுடியை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்குன்றம்  விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர்  28 வயது  அஸ்வின் . பிரபல ரவுடியான இவருக்கு கொலை மிரட்டல் அதிகரித்ததால்  தற்காலிகமாக சோழவரம் அருகே புதூரில் வீட்டை மாற்றிக்கொண்டார்.  

கட்டையால் அடித்து கொலை
பொங்கல் கொண்டாடுவதற்காக  விஜயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் ரவுடி அஸ்வின் குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்றிரவு பைக்கில் ரவுடி அஸ்வின் தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று , அவரது பைக்கை வழிமறித்தது.  பின்னர் ரவுடி அஸ்வினை ஓட ஓட விரட்டி, மர்ம கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அஸ்வின் படுகாயங்களுடன்  மயங்கி விழுந்தார். 

போலீஸ்
அவரது அலறல் சத்தம் கேட்டதும்  ஓடிவரவே மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  அரசு சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  பலியானார்.இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  காவல்துறையினர்  ரவுடி அஸ்வினின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தற்போது கொலை செய்யப்பட்ட ரவுடி அஸ்வினுக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளி நவீனுக்கும் முன்விரோதம் இருந்தது


 இதில் அஸ்வின் நவீனை கொலை செய்ததற்கு அவனது கூட்டாளிகள் பழிக்குப்பழியாக நேற்றிரவு ரவுடி அஸ்வினை வெட்டி கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகத்தின்பேரில், இன்று காலை விஜயநல்லூரில் வசித்து வரும் வெள்ளை வினோத், சரத் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில்  அஸ்வினை மற்றொரு கூட்டாளி வேலுவுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயநல்லூரில் பதுங்கியிருந்த வேலு (எ) வேலப்பனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். சினிமா பாணியில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web