சாதனைக்கு பார்வைக்குறைபாடு தடையல்ல!! ஒரே நேரத்தில் 30 கருவிகளை இசைத்து அசத்தல் !!

 
காட்சன்

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல எனக்கூறுவார்கள் அதே போல் உடலில் எந்த குறைபாடு வந்தாலும் கவலையில்லை . நான் சாதித்தே தீருவேன் என்ற எண்ணம் ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். நிச்சயம் அவர் சாதனையாளர்தான். காட்சன் ரூடுல்ஃப் ஒரு பார்வை குறைபாடுடைய ஒரு இசைக்கலைஞர் இவர்   30 இசைக்கருவிகளை வைத்து ஒரே நேரத்தில் வாசித்து அசத்துகிறார். இவரது தந்தை ஒரு கட்டிட வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

காட்சன் சின்னஞ்சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் மிக்கவர். இவரின் இசை ஆர்வத்தை பார்த்த இவருடைய தந்தை முறையாக இசை பயிற்சி அளிக்க  இசைபள்ளியை தேடிய போது இவரை யாரும் இசைப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. அதே நேரத்தில்  இவருக்கு இசையின் மேல் உள்ள ஆர்வத்தால், தனது இசை கருவியைக்கொண்டு தானாக இசையை கற்று வந்தார்.இது குறித்து காட்சன் தனது நேர்காணலில் 'எனது 12 வயதில் ராஜேஷ் என்ற இசை ஆசிரியரிடம் முறையாக டிரினிட்டி கற்றுக்கொண்டேன். அனிருத்தின்  இசையை மிகவும் ரசிப்பேன்.

ஒன்றை உண்மையாகவே நம்பினால் அவை நம்மை உயர்த்தலாம். என் வாழ்க்கையில் நான் உணர்ந்தது. அதே போல் எனக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.  புத்தகம் படிக்கும் பொழுது புதிதாக ஒரு விஷயம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அப்துல் கலாமின் கோட்பாடுகள் மிகவும் பிடிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டு அவர்களின் ஆசைகளை கேட்டறிய வேண்டும்.  எனக்கு எம்எஸ்சி கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்பது ஆசை. என்னால் நிச்சயமாக படிக்கமுடியும். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை .  இந்த லாக்டவுன் நாட்களில் நான் நிறைய அப்பிளிகேஷன்களை கற்றுக்கொண்டேன்.  யூடியூப் மூலம் எனது திறமையை வெளிக்காட்டியதால் தான் உலகம் என்னை அடையாளம் கண்டு கொண்டது" எனத் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web