ப்ளூஸ்-ராக்கர் வில்கோ ஜான்சன் புற்றுநோயால் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
கேம் ஆப் த்ரோன்ஸ்


மிகக்குறுகிய காலத்தில் மக்களிடையே பிரபலமான வெப்சிரீஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். இந்த  வெப் தொடரில் ஊமை பெய்னாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் வில்கோ ஜான்சன் . இவருக்கு வயது 75. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் நவம்பர் 21ம் தேதி காலமானார். வில்கோ ஜான்சன்  2013ல்  கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 

1947ல் பிறந்த ஜான்சன் இங்கிலாந்தின் தேம்ஸ் நதி முகத்துவாரத்தில் உள்ள சதுப்பு நிலமான, தொழில்துறை எண்ணெய் நகரமான கேன்வி தீவில் வளர்ந்தவர். அவர் நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலோ-சாக்சன் இலக்கியத்தைப் படித்தார் .  பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்  இவர், 1970களில் டாக்டர் ஃபீல்குட் என்ற இசைக்குழுவில் கிடார் கலைஞராக இருந்தவர்.  அதே நேரத்தில் பல்வேறு பாடல்களை எழுதி, இசையும் அமைத்தவர். பன்முகத் திறமை கொண்ட இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.  இவரது மறைவிற்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web